பொருளாதார, நிதி மறுசீரமைப்பு மற்றும் கொள்கை வகுப்பு தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக இலங்கை வருகைதந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்டக் குழுவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

இதன்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு உரியவாறான தீர்வைக் கண்டறிவதை முன்னிறுத்திய ஆரம்பக்கட்டக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன் தொடர்ச்சியாக இரண்டாம் சுற்று கலந்துரையாடல்களை நாளைய தினம் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.