சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவைப் பிரிவு அகில இலங்கை ரீதியாக நடத்திய கவிதை, சிறுகதைப் போட்டிகளில் தெரிவானவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்வு கூட்டுத்தாபனத் தலைவர் ஹட்சன் சமரசிங்க  தலைமையில் முஸ்லிம் சேவைப் பிரிவு கட்டுப்பாட்டாளர் ரினோசியா ஜவ்பர் முன்னிலையில் ஆனந்த சமரக்கோன் கலையரங்கில்(19) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது
.இதன்போது “இந்தியாவில் சாதனை படைத்த முஸ்லிம்களின் வரலாறு” என்ற   புத்தகத்தை   புரவலர் ஹாஷிம் உமர் கூட்டுத்தாபனத் தலைவரிடம் கையளிப்பதையும் தலைவர் ஹட்சன்சமரசிங்க,  முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப்,  கூட்டுத்தாபன நிகழ்ச்சி தயாரிப்புப் பிரிவு பிரதிப் பணிப்பாளர் மயூரி அபேசிங்க ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டிருப்பதையும் கூட்டுத்தாபன தமிழ் பிரிவு ஆலோசகர் புரவலர் ஹாஷிம் உமர் வெற்றிபெற்ற ஒருவருக்கு பரிசு வழங்குவதையும்  நிகழ்வில் கலந்து கொண்டவர்களுள் ஒருபகுதியினரையும்  ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.

(படங்கள் இன்பாஸ் சலாவுதீன்.)