சாரதி அனுமதிப்பத்திர கட்டணங்களில் மாற்றம்

0
424

சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் திருத்துவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அனுமதி கோரியுள்ளது.

வெளிநாட்டு தொழிலுக்காக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

மேலும், அதன் அனைத்து சேவைகளுக்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அமைச்சரின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. இது விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2009ஆம் ஆண்டு இக்கட்டணங்கள் இறுதியாக திருத்தம் செய்யப்பட்டு 13 வருடங்களின் பின்னர் இந்தக் கட்டணங்களுக்கான திருத்தங்கள் இடம்பெறவுள்ளதாகவும் இதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் அனுமதி கிடைத்துள்ளதாகவும், திருத்தங்கள் திறைசேரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சாரதி அனுமதிப்பத்திர திணைக்கள ஆணையாளர்  வசந்த என்.ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here