சிங்கபூரிலிருந்து வெளியேறினார்

0
213

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று சிங்கப்பூரிலிருந்து வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்னர் குறுகிய கால பயண அனுமதிச்சீட்டில் சிங்கப்பூருக்கு சென்ற இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று சிங்கப்பூரை விட்டு வெளியேறியதை சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் அதிகாரசபை உறுதிப்படுத்துவதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவின் குறுகிய கால பயண அனுமதி இன்று (11) காலாவதியாக இருந்தது. ஜூலை 14 ஆம் திகதி சிங்கப்பூர் வந்தபோது அவருக்கு முதலில் 14 நாள் பயண அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் இது ஆகஸ்ட் 11 வரை மேலும் 14 நாட்கள் நீடிக்கப்பட்டன.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கையை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ஷ, இன்;று தாய்லாந்து சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவருக்கு அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை என்றும், தற்காலிகமாக மட்டுமே தங்கியிருப்பார் என்றும் தாய்லாந்து பிரதமர் முன்னதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here