ஜனாதிபதி கோட்டாபய எஸ்.வி -788 விமானம் சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதுடன் அவரது பதவி விலகும் இராஜினாமா கடிதம் இலங்கையை வந்தடைந்ததாகவும் தெரியவருகிறது.

முக்கிய அதிகாரி ஒருவருக்கு அக்கடிதம் கிடைத்திருப்பதாகவும் அவரூடாக இன்று இரவு சபாநாயகரிடம் கையளிப்படவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இன்று கடிதம் கிடைத்தால் பதில் ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.