கோட்டாவை வழியனுப்பிய சபாநாயகர்

0
264

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் (SV788) புறப்பட்டதாக  மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாலைதீவில் தங்கியிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச   சவுதிஅரேபிய ஜெட் விமானம் ஒன்றில் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளார். தனிப்பட்ட முறையில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானத்திலேயே அவர் புறப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்னும் சில மணி நேரத்தில் அவர் சிங்கப்பூரில் இறங்குவார் எனவும், இன்று மாலைக்குள் அவரது இராஜினாமா கடிதம் அனுப்பிவைக்கப்படும் எனவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் தங்கிச்செல்வதற்கான ஏற்பாட்டைச்செய்துகொடுத்த அந்த நாட்டின் சபாநாயகர் முகமத் நசீட் விமான நிலையத்துக்கு வருகை தந்து கோட்டாபயவை வழியனுப்பிவைத்தார்.
மாலைதீவின் விசேட பாதுகாப்புப் படை ஒன்றின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே அவரும், அவரது மனைவி, இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் விமான நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here