சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புக்களை புதிதாக ஆரம்பிப்பதை தடைசெய்து இலங்கை மத்திய வங்கி சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கிணங்க இனிமேல் புதிதாக சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிலையான வைப்புக்களை ஆரம்பிப்பது நிறுத்தப்படுவதுடன் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையான வைப்பு நிறைவுற்றதன் பின்னர் அதனை நீடிக்கப்போவதில்லையென்றும் வர்த்தக வங்கிகள் தெரிவித்துள்ளன.
 சிரேஷ்ட பிரஜைகளுக்கு 15 இலட்சம் உச்ச நிலையான வைப்புக்காக வருடாந்தம் 15% உயர் வட்டியை பெற்றுக்கொடுப்பதற்கு வர்த்தக வங்கிகள் பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வந்துள்ளன.
 அது தொடர்பில் வர்த்தக வங்கியொன்றின் அதிகாரி தெரிவிக்கையில், சாதாரண நிலையான வைப்புகளுக்கு 15 இலட்சம் ரூபாவை வைப்பிலிடுவதற்கான வட்டி வீதம் அதிகரிக்கப்பட்ட நிலையில் அது தற்போது 23%மாக வழங்கப்பட்டு வருகிறது.
அதற்கிணங்க, சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்பை ரத்துச்செய்வதன் மூலம் அவ்வாறு வைப்பிலிடுபவர்களுக்கு ஏற்படும் நட்டத்தை இல்லாதொழிப்பதற்காகவே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்த்தார்