2021,2022 ஆம் ஆண்டுகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொடுத்த அதிபர்கள் ஆசிரியர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அட்டன், பிரின்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் உயர்தரம், மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொடுத்த அதிபர்கள் ஆசிரியர்கள் என 350 பேர் கௌரவிக்கப்பட்டனர்

மத்திய மாகாண கல்விப்பணிப்பாளர் பியதாச தலைமையில் இடம்பெற்ற இந் திகழ்வு அட்டன் வலயக்கல்விப்பணிபாளர் சத்தியேந்திரா வின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

மேலும் இந் நிகழ்வில் இதுவரை காலமும் கல்வித்துறையில் சேவையாற்றி ஒய்வு பெற்று செல்லும் அதிபர்கள் ஆசிரியர்களும் இதன் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எம்.கிருஸ்ணா