சிறிலங்கன் ஏர்லைன்சை வாங்கப் போவது யார்?

0
67

 

சிறிலங்கன் ஏர்லைன்சை வாங்கப் போகும் மூன்று நிறுவனங்களை அந்நாட்டு அரசு இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்துள்ளதாக கொழும்புத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக இன்று சனிக்கிழமை வெளியான அந்த வார ஏட்டின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை கொள்வனவு செய்ய விருப்பம் தெரிவித்த ஆறு நிறுவனங்களில் மூன்று, அமைச்சரவையால் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், Sheriza- Supreme group மற்றும் Hayleys கொம்பனி ஆகிய இரண்டு உள்ளூர் நிறுவனங்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சிறிலங்கன் ஏர்லைன்சை கொள்வனவு செய்யும் மூன்று இறுதிப் போட்டியாளர்களில் ஆசியாவில் குறைந்த கட்டண விமான சேவையான Air asia-வும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிதியமைச்சின் கீழ் அமைக்கப்பட்ட பொது நிறுவனங்களின் மறுசீரமைப்புப் பிரிவானது சிறிலங்கன் ஏர்லைன்சை தனியார் துறைக்கு எடுத்துச் செல்வதற்கு ஆர்வமுள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து ஏலங்களை அண்மையில் கோரியதுடன், ஆறு நிறுவனங்கள் இதற்காக முன்வந்தன.

AirAsia, Fitz Air, Darshan Elites Investment Holdings, Fitz Aviation, Sheriza Technologies Subsidiary Supreme Company, Treasure Republic Guardian Company மேலும் Hayleys இவ்வாறு சிறிலங்கன் எர்லைன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான தகுதிகளை அறிவித்துள்ளது.

இந்த நிறுவனங்கள் தொடர்பில் அமைச்சரவை உபகுழுவினால் மேற்கொள்ளப்பட்ட சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் பரிந்துரைகளை மதிப்பிட்டு சிறிலங்கன் எர்லைன்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கு மூன்று நிறுவனங்கள் இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதில் இரண்டு நிறுவனங்கள் உள்ளூர் வணிகங்கள் மற்றும் Hayleys இலங்கையைச் சேர்ந்தது. இது ஒரு முன்னணி பொது நிறுவனம் ஆகும்.

மேலும், சுப்ரீம் குளோபல் நிறுவனம் இலங்கையில் பல முதலீடுகளில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனம் ஆகும். மேலும், அந்த நிறுவனம் தனது லட்சிய முன்மொழிவை ஷெரிசா டெக்னாலஜிடம் முன்வைத்துள்ளது. இது கட்டார் நாட்டின் ஷேக்கான நயீப் பின் ஈத் அல் தானியின் முதலீடாகும்.

அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இயங்கி வரும் இலங்கையின் தேசிய விமான சேவையானது தனது முன்னேற்றத்தையும், வேலை பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், இனி விமான சேவையை பராமரிக்க முடியாத நிலைமையை எதிர்நோக்கியுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here