சிறுபோகத்திற்குத் தேவையான உரம் எதிர்வரும் 4ம் திகதி விநியோகிக்கப்படும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இவற்றை விரைவாக விவசாயிகளுக்கு கையளிப்பதே நோக்கமாகும்.

இதன் பின்னர் ஒவ்வொருபோகத்திற்கும் தேவையான உரத்தை உரிய காலப்பகுதியில்  வழங்குவது தொடர்பில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.