Attulugama

பண்டாரகம அட்டலுகம பிரதேசத்தில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் 29 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஒப்புதல் வாக்குமூலம் அறிவித்துள்ள நிலையில, பொலிஸார், அவரை இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பாததால் குழந்தை காணாமல் போனதாக பெற்றோரால் புகார் அளிக்கப்பட்டது.
பண்டாரகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததைத் தொடர்ந்து குழந்தையின் சடலம் மறுநாள் (28) அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இருந்து மீட்கப்பட்டது.

சிறுமி வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.