சிறுவர் நன்னடத்தை பாடசாலையிலிருந்து 16 வயது சிறுமி மாயம்

0
356

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையிலிருந்து 16 வயது சிறுமி மாயமாகியுள்ளதாக குறித்த பாடசாலையின் நிர்வாகத்தினர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் மாலை முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவதினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணியிலிருந்து குறித்த சிறுமி மாயமாகி உள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

குறித்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்த குறித்த சிறுமி பலரால் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு , வழக்கு விசாரணையின் பின்னர் குறித்த பாடசாலையில் பாதுகாப்பிற்காக நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

சம்பவ தினமான நேற்று குறித்த சிறுமி பகல் உணவினை உட்கொண்ட பின்னர் பாடசாலை வளாகத்தில் நின்றதாகவும் பின்னர் திடிரென அவர் அங்கிருந்து காணாமல் சென்று விட்டதாக பாடசாலை காப்பாளர் தெரிவித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. தற்போது மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here