சூரிய சக்தியில் இயங்கும் படகு சேவை ஆரம்பம்

0
171

பத்தரமுல்லை – ஹீனெடிகும்புர முதல் வெள்ளவத்தை வரை சூரிய சக்தியில் இயங்கக்கூடியதான சிறப்பு படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்குடன், பயணிகள் படகு சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் உள்ளக கால்வாய்கள் ஊடாக மேலும் பல்வேறு படகு சேவைகளை ஆரம்பிக்க நகர அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

சூரிய சக்தி மூலம் செயல்படுவதால் இந்தப் படகுச் சேவைகளுக்கு எரிபொருள் செலவு ஏற்படாது எனவும், இதனால் ஒலி மாசு ஏற்படாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இச்சேவை நாளாந்தம் அலுவலக நேரங்களில் இயங்கும் என்பதுடன், படகொன்றில் எட்டு பேர் வரை பயணிக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here