உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 2023 மார்ச் 25ஆம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.  2018ஆம் ஆண்டே உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்றது.

அதன் பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைய இருந்தது. ஆனால் உள்ளூராட்சி அமைச்சரின் அதிகாரத்தின் படி உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டது.

அதன்படி உள்ளூராட்சி மன்ற தேர்தலை இம்மாதம் 20ஆம் திகதிக்கு பின்னர் நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.