2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான செயன்முறைப் பரீட்சைக்கு தோற்ற முடியாத பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் பரீட்சைகளில் தோற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் எதிர்வரும் 19, 20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் செயன்முறை பரீட்சைகள் நடைபெறவுள்ளன. செயன்முறை பரீட்சையின் ஒரு பகுதி அல்லது முழுமையான பரீட்சைக்கு தோற்ற முடியாத 425 மாணவர்கள் இதுவரை விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.