நான் செல்போனுக்கு அடிமையாகி விட்டேன் என்னால் அதிலிருந்து மீள முடிய வில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்’ என கடிதம் எழுதி வைத்து விட்டு தரம் 11 இல் பயிலும் மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவமொன்று கேராளாவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் கள்ளம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா மோகன் (16). 11-ம் வகுப்பு படித்து வந்த தனது அறையில் கழுத்துக்கு சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த மாணவியின் அறையிலிருந்து கடிதமொன்றை கண்டெடுத்துள்ளனர். அத்துடன், குறித்த மாணவியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், ‘எங்கள் மகள் நன்றாக படிக்கக் கூடியவர். அவள் தினமும் அறையை சாத்திக் கொண்டு தான் படிப்பாள். கடந்த சனிக்கிழமை அப்படி தான் படித்துக் கொண்டிருந்தாள். சாப்பிட வருமாறு கதவை தட்டிய போதுதான் அவர் தூக்கில் பிணமாக தொங்கியதைக் கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்’ என்று பெற்றோர் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் கூறுகையில்,

‘மாணவி, செல்போனுக்கு அடிமையானதற்கான பெரிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. அடிக்கடி யூ-டியூபில் கொரியன் படங்களில் நிகழ்ச்சியை பார்த்ததாக தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளi மேற்கொண்டுள்ளனர்.