சைக்கிள்களை குத்தகைக்கு வழங்கத் திட்டம்

0
291

இலங்கையில் உள்ள பல முன்னணி குத்தகை நிறுவனங்கள் குத்தகை நிலையத்துக்கு ஈருளிக்களை (சைக்கிள்) வழங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

நாட்டில் ஈருளிக்களுக்கு அதிக கிராக்கி காணப்படுவதாலும், ஈருளிக்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளதாலும் நுகர்வோருக்கு பணம் செலுத்தும் வழியை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

எரிபொருள் நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக மக்கள் அதிகளவில் ஈருளிக்களை நாடுகின்றனர்.

அண்மையில், ஈருளி கடைகளுக்கு ஏராளமானோர் வந்து செல்வதால், குறைந்த விலையில் ஒரு ஈருளி 50,000.00 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here