சொகுசு வீடி ஒன்றில் தனியாக வசித்து வந்த 65 வயதுடைய கோடீஸ்வர பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கண்டி பகுதியில் வசித்து வந்த 65 வயதான பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த பெண் அரச துறையில் உயர் பதவி வகித்த பின்னர் ஓய்வுபெற்று தனியாக வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள தனக்குச் சொந்தமான பெரிய பல கடைகளை வாடகைக்கு கொடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவரது கணவர் முன்னரே உயிரிழந்து விட்டதாகவும் இவர்களது இரண்டு குழந்தைகளும் அவுஸ்திரேலியாவில் வசிப்பதாகவும் தெரிய வந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.