ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு பொதுஜன பெரமுன முழுமையான ஆதரவை வழங்கும். பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை ஒன்றிணைந்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், அரசியல் காரணிகளுக்கு முன்னுரிமை வழங்கக் கூடாது என்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கத்தை தோற்றுவித்து ஆதரவு வழங்கியுள்ளோம்.

பொதுஜன பெரமுனவின் ஒரு சில உறுப்பினர்கள் தங்களின் தனிப்பட்ட பகைமையை அடிப்படையாக கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதை தவிர்த்துள்ளார்கள்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் அரசியல் காரணிகளுக்கு முன்னுரிமை வழங்க கூடாது என்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியுள்ளோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன.

ஒன்றிணைத்து முன்னாள் பிரதமர் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.