ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் திணைக்களத்தின் அறிவிப்பு

0
150

ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் (2024) செப்டெம்பர் மாதம் 21 ஆம் சனிக்கிழமை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களை பெயர் குறித்து நியமிக்கும் வேட்புமனு தாக்கல் இடம்பெறும் திகதியாக ஓகஸ்ட் 15ஆம் திகதி வியாழக்கிழமை என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான கட்சிகளான தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் அநுர குமார திஸாநாயக்கவும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சஜித் பிரேமதாஸவும் போட்டியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்கத்கது.

அத்துடன் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் தங்களது வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது வரை மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, விஜயதாச ராஜபக்ஷ, சரத் பொன்சேகா ஆகியோர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here