அடுத்த ஜனாதிபதி பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நியமிக்கும் தீர்மானத்தை ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஏகமனதாக அங்கீகரித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான தீர்மானம் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் கொண்டுவரப்பட்டதுடன், பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதில் ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், திகாம்பரம், மனோ கணேசன் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றதாக கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.