ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பதவி விலகும் வரையில் இன்று திஙகட்கிழமை முதல் ஒரு வார காலப் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று காலை 10.00 மணிக்கு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி பொதுமக்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதனையடுத்து, நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.