ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பிலும், அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிச் செல்ல நாம் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவது என்பது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.