ஜனாதிபதி கோட்டா குழுவினரை பாதுகாக்க சிறப்பு படையணிகள் வரவழைப்பு

0
270

கொழும்பில் நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி கோட்டா குழுவினருக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியின் போது மக்களின் எதிர்ப்புக்களை முறியடிக்க, கொழும்புக்கு சிறப்பு படையணிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பொதுமக்களின் எதிர்ப்பை நாளை சனிக்கிழமை (09.07.2022) எதிர்கொள்ளும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக அரச தலைவரின் மாளிகையைச் சுற்றி இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் பிரதமர் ரணில் மற்றும் மகிந்த தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சியாளர்களின் பாதுகாப்பிற்காக கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெறும் 1,500 பேர் கூட இந்த பாதுகாப்புப் படைக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும், ஏற்கனவே 4,000-க்கும் அதிகமான இராணுவத்தினர் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
வடமேற்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்து 3,000 காவல்துறையினர், கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இதற்காக குடிமக்கள் பாதுகாப்பு படைப்பிரிவைச் சேர்ந்த சுமார் 1,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here