ஜனாதிபதி மாளிகைக்குள் திருடியவர்கள் கைது

0
179
ஜனாதிபதி மாளிகையில் ஜன்னல் திரைச் சீலை தொங்கவிட சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த 40 தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை brass sockets இனை திருடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூலை 9 அன்று கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் ஆர்ப்பாட்டத்தின் போது அத்துமீறி நுழைந்த மூன்று பேர் இதனை திருடியுள்ளனர்.
நேற்று திருடப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய முற்பட்ட போதே வெலிக்கடை பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். இவர்கள் 28, 34 மற்றும் 37 வயதுடைய ராஜகிரிய ஒபேசேகரபுர பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here