கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி இல்லத்திற்கு அருகில் காலை ஹிருணிகா குழுவினர் ஆர்ப்பாட்டம் முன்னெடுத்ததையடுத்து குறித்த பகுதியில் கண்ணீர்ப்புகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகளவு நடமாடும் வீதியில் இவ்வாறான நடவடிக்கை மேற்கொண்ட பொது பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மூலம் அறியக்கூடியதாக இருந்தது.

பொதுமக்கள் செல்லும் இந்த இடங்களில் கண்ணீர்ப்புகை பிரயோகிப்பதற்கு அனுமதி தந்தது யார்? ஏன் இவ்வாறான பைத்திய தனமான வேலையை முன்னெடுக்கின்றார்கள் என அங்கிருந்தவர்கள் கூறியதுடன், சிறுவனொருவன் குறித்த இடத்தில் நடந்துச் சென்ற நிலையில் கண்ணீர்புகை தாக்கத்தினால் கீழே விழுந்த சம்பவமும் இதன்போது இடம்பெற்றுள்ளது.