ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணம் பொலிஸில் ஒப்படைப்பு

0
322

ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட ஒரு கோடியே 78 இலட்சத்து 50,000 ரூபா பணம் பல்கலைக்கழக மாணவர்களால் கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையில் கடமையிலிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரிடம் பல்கலைக்கழக மாணவர்களால் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அது பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவ்வாறு கையளிக்கப்பட்டுள்ள பணம் தொடர்பில் கோட்டை நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த போது, பல்கலைக்கழக மாணவர்கள் உரிய பணத்தை தமது பொறுப்பில் எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here