ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கொள்ளை விளக்கவுரையில் கூறியது என்ன?

0
237

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்காக சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்துகொள்வதற்கு அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி தனது கொள்கை உரையை நிகழ்த்தும் போது அழைப்பு விடுத்துள்ளார்.

9 ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பமாகியது. இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

இலங்கை இக்கட்டான நிலையில் இருக்கும் போது இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கியது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த இலங்கைக்கு உயிர்மூச்சு வழங்கிய இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இத்தருணத்தில் நன்றி பகிர்கின்றேன்.

ஒவ்வொரு நாளும் வெளிநாடுகளிடம் கடன் வாங்கி நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது. எனவே கடன் வாங்கும் எல்லையை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் வேண்டும் .

மேலும், முன்னைய அரசாங்கம் திருகோணமலை எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய முற்பட்டபோது பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவற்றை இந்தியாவுக்கு விற்பனை செய்வதாக தெரிவித்து அந்த திட்டத்தை கைவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.

அன்று அந்த அபிவிருத்தி நடவடிக்கை இடம்பெற்றிருக்குமானால் இன்று எரிபொருள் வரிசைகள் இருந்திருக்காது . மேலும், சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைகளை ஆரம்பிக்கும் போதும் அப்போதைய எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை இட்டன. இதனூடாக பல மரணங்கள் நிகழும் எனவும் குறிப்பிட்டனர். ஆனால், நாங்கள் அதை தைரியமாக முன்னெடுத்தோம். அதனூடாக இன்று பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

எனவே, நல்ல திட்டங்கள் முன்னெடுக்கும் போது அவற்றை வரவேற்க வேண்டியது நம் அனைவரினதும் பொறுப்பாகும். என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here