President
Gota

சபாநாயகர் இல்லத்தில் நடந்த கட்சி தலைவர் கூட்ட முடிவுகள்

கட்சி தலைவர்கள் கோர முன்னரே ஜனாதிபதி சுயமாக ராஜினாமா செய்து விட்டதாக சபாநாயகர் இல்லத்துக்கு செய்தி வந்ததுள்ளதாக மனோகணேசன் எம்.பி. தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சற்று முன் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் சம்பந்தமாகவும் குறிப்பிட்டுள்ளார்..

(1)ஜனாதிபதி, பிரதமர் பதவி விலக வேண்டும்.
(2)சபாநாயகர் இடைகால ஜனாதிபதியாக வேண்டும்.
(3)பாராளுமன்றம் பதில் ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும்.
(4)சர்வகட்சி அரசை உருவாக்க வேண்டும்.
(5)இவ்வருட இறுதிக்குள் புதிய மக்களாணை பெற பாராளுமன்ற தேர்தல் நடத்த வேண்டும்.