ஜீவன் எம்.பியின் வேண்டுகோளுக்கிணங்க அட்டன் நகரில் குப்பைகளை அகற்றும் நடவடிக்கை

0
262

அட்டன் பொது சுகாதார அதிகாரி பாலசுப்பிரமணியத்தின் கண்காணிப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க அட்டன் நகரின் சில இடங்களில் குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

அட்டன் நகரத்தில் சேகரிக்கும் குப்பைகளை பொலித்தீன், கடதாசி, மற்றும் ஏனைய கழிவு பொருட்களை உக்கும் , உக்கா கழிவுகள் என வகை பிரித்து இடுமாறு நகரமக்களிடம் ஹட்டன் நகரசபை விடுத்துள்ள வேண்டுகோளை நகர மக்களை பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜீவன் எம்.பி.

ஞாயிறு சந்தை தொகுதியின் கழிவுகளை அகற்றிய பின்னர் எதிர்காலத்தில் அவ்விடத்தில் சந்தைதொகுதி வழமைபோல் இயங்கும் எனவும் அட்டன் நகரம் மற்றும் அதை அன்மித்த பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவு பொருட்கள் படிப்படியாக அகற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தகவல்- ஜீவன் தொண்டமான் – FB

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here