பிரபல நடிகை இளைஞர்களின் நாயகி நயன்தாரா , இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதி மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகின்றனர்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தை சினி உலகு எதிர்ப்பார்த்திருந்த நிலையிலேயெ இவரது திருமணமும் விரைவில் நடைபெறவுள்ளது. சமீபத்தில் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு சென்று தங்களது வேண்டுதல்களை அவர்கள் நிறைவேற்றி வந்தனர்.