இலங்கையில் எதிர்வரும் சனிக்கிழமை (09.07.2022) எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படலாம் என்று சிங்கள இணையத்தளம் ஒன்று பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் இன்று வெளியான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அடுத்த சில நாட்களுக்குள் புதிய நிதியமைச்சர் ஒருவரை நியமிக்க அரச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக அரசாங்கத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நியமனம் பெரும்பாலும் ஜூலை 9 ஆம் நாள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பிரதமர் பதவியை விட்டு விலகலாம் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படியானால், அது இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு தனித்துவமான சூழ்நிலையாக இருக்கும். ஏனெனில், மே 9 ஆம் நாள் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் மகிந்த ராஜபக்ச, பிரதமர் பதவியை விட்டு விலக நேரிட்டது.

ஜூன் 9 ஆம் நாள் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டியிருந்தது. அதன்படி, ஜூலை 9 ஆம் திகதி; என்ன நடக்கப்போகின்றது என்பதை அறிய ஆவலாக உள்ளதாகவும் அறியக்கூடியதாக உள்ளது.