தலவாக்கலை பி.கேதீஸ்
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது என ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் தெரிவித்துள்ளார்
ஜோசப் ஸ்டாலின் நேற்று  (3) சங்கத்தின் தலைமையகத்தில் வைத்து கொழும்பு கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்.
இது ஒரு திட்டமிட்ட செயல். இது அரசியல் சூழ்ச்சிக்காக இடம்பெற்ற கைதாகவே நாங்கள் கருதுகிறோம். இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.ஜோசப் ஸ்டாலின் ஆசிரியர்களுக்காக மட்டுமன்றி பொது மக்களுக்காகவும் குரல் கொடுக்கும் ஒருவர். சமூக செயற்பாட்டாளரான ஜோசப் ஸ்டாலின் பல்வேறு போராட்டங்களுக்கு தலைமை வகித்துள்ளார்.
இவர் எங்களுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுப்பட்டுள்ளார். போராட்டம் நடாத்துவது எமது உரிமை அதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளமை மிகவும் வருத்தமளிக்கின்றது. எனவே அவர் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்றார்.