பிரபல தெழிற்சங்கவாதியும்  இலங்கை ஆசிரியர் சங்க செயலாளருமான ஜோசப் ஸ்ராலின்   கைதானது   மிக  மிக வன்மையான கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள்  மட்டக்களப்பில் கண்டனப் போராட்டம் ஒன்றினை நடத்தினர்.

அரசின் இதுபோன்ற அராஐகங்கள் உடன்  நிறுத்தப்பட வேண்டும்  ஐனநாயக வழிப்
போராட்டக்காரரை ஒடுக்கும் செயலை அரசாங்கம் உடன் நிறுத்தவேண்டு மெனக்கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஆசிரியர்கள் ஜோசப் ஸ்ராலினை விடுதலை செய்யவேண்டும் என்ற கோசங்களை எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், போராட்டக்காரர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்காதே, ஜோசப் ஸ்ராலின் உட்பட அனைத்து போராட்டக்காரர்களையும் விடுதலை செய், சமத்துவ சட்டவாட்சியை நடைமுறைப்படுத்து, ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்காதே போன்ற சுலோகங்களையுடைய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.