டயர் வெடித்தமையினால் மின்கம்பத்தில் மோதிய வேன்

0
268

வேனொன்றின் டயர் வெடித்து பாதையை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி விபத்தக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த வேன் வண்டியொன்றிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இதன்போது வேனுக்கு பாரிய சேதம் எற்பட்டுள்ளதுடன், மின்கம்பத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

நேற்று மாலை இடம் பெற்ற இவ்விபத்தின்போது வேனிலிருந்து எயார்பேக் சரியாக இயங்கியதால் தெய்வாதீனமாக சாரதி உயிர் பிழைத்தார் என தெரிவிக்கும் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here