டிக்கோயா, தரவளை தோட்ட லயன் குடியிருப்பில் தீ

0
343

டிக்கோயா தோட்டத்தின் தரவளை கீழ்ப்பிரிவிலுள்ள லயக்குடியிருப்பில் 4 வீடுகளைச் சேர்ந்த 20 பேர் வரை  பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன.

அத்துடன் தீ ஏனைய வீடுகளுக்கும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

12 வீடுகளைக் கொண்ட குறித்த லயக்குடியிருப்பில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் பொலிஸார், ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து  தீயை அணைத்ததாக  ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here