டிசம்பரில் 25 ஆயிரம் பேர் ஓய்வு பெறுகின்றனர்

0
168

டிசெம்பர் 31ஆம் திகதிக்குள் சுமார் 25,000 அரச உத்தியோகத்தர்கள் 60 வயதை பூர்த்தி செய்து ஓய்வு பெறவுள்ளனர். வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய, அவர்கள் அனைவருக்கும் ஓய்வு வழங்கப்பட வுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே. மாயதுன்னே தெரிவித்தார்.

இதனடிப்படையில், டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் 60 வயதை பூர்த்தி செய்யும் அரச உத்தியோகத்தர்கள் தங்களின் பணி ஓய்வு விண்ணப்பங்களை நிறுவன தலைவர்களுக்கு அனுப்ப வேண்டும். அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு வயதை 60 ஆக குறைப்பது தொடர்பான சுற்றறிக்கை கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது.

இடைக்கால வரவு – செலவுத் திட்ட முன்மொழிவின் படி, அரச ஊழியர்களின் ஓய்வு வயதை 60ஆகக் குறைக்க தீர்மானிக்கப்பட்டது.

இதனிடையே, பணி மூப்பு மற்றும் ஓய்வூதியத்தை பாதிக்காத வகையில், அரச உத்தியோகத்தர்களுக்கு ஊதியமில்லாத விடுமுறை வழங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கையும் நேற்று முன்தினம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here