டுபாய் கெப்பிட்டல்ஸ் அணியில் இலங்கையைச் சேர்ந்த 5 வீரர்கள் ஒப்பந்தம்

0
306

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள இண்டெர்நெசனல் லீக் T20 (ILT20) தொடரின், டுபாய் கெப்பிட்டல்ஸ் அணிக்காக இலங்கையைச் சேர்ந்த 5 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ILT20 தொடரில் விளையாடவுள்ள அணிகள் தங்களுடைய வெளிநாட்டு வீரர்களை அறிவித்து வருகின்றன. இந்தநிலையில், டுபாய் கெப்பிட்டல்ஸ் அணி தங்களுடைய குழாத்துக்கான 14 வெளிநாட்டு வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.

இதில் ஏற்கனவே இலங்கை அணியைச் சேர்ந்த பானுக ராஜபக்ஷ, தசுன் ஷானக மற்றும் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர ஆகியோர் இணைக்கப்பட்டிருந்த செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில் இலங்கை அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல மற்றும் ஓய்வுபெற்ற வேகப்பந்துவீச்சாளர் இசுரு உதான ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர். அதன்படி மொத்தமாக 5 இலங்கை வீரர்கள் டுபாய் கெப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

மேற்குறிப்பிட்ட இலங்கை வீரர்களுடன் மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை வீரர் ரோவ்மன் பவல், பெபியன் எலன் ஆகியோருடன் ஆப்கானிஸ்தானின் சுழல் பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ஹஷரதுல்லாஹ் ஷசாய் ஆகியோரையும் டுபாய் கெப்பிட்டல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here