அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் மனைவி இவானா ட்ரம்ப் தனது 73 ஆவது     வயதில்    காலமானார்.

டொனால்ட் ட்ரம்பின் முதல் 3 பிள்ளைகளான டொனால்ட் ஜூனியர், எரிக் ட்ரம்ப் மற்றும் இவாங்கா ட்ரம்பின் தாய்  இவானா ட்ரம்ப் (Ivana Trump) ஆவார்.

1949 ஆம் ஆண்டு செக்கஸ்லோவாக்கியாவில் (தற்போது செக்குடியரசுக்கு உட்பட்ட ஸ்லின் நகரில்) பிறந்தவர் இவானா ட்ரம்ப்.

நியூயோர்க் பொலிஸாரின் அவசர சேவை பிரிவுக்கு வந்த அழைப்பின் பேரில் பொலிஸார், இவானாவின் வசிப்பிடத்துக்கு சென்று பார்த்தபோது, 73 வயதான பெண்ணொருவர் சுயநினைவின்றி கிடந்ததாகவும், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் எனவும் நியூயோர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனார்.

இவானாவின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கவலை தெரிவித்துள்ளார்.

இவானா நியூயோர்க் நகரிலுள்ள அவரின் வீட்டில் காலமானார் எனத் தெரிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், அவர் வியத்தகு, அழகிய, அற்புதமான பெண் எனக் குறிப்பிட்டுள்ளார்.

டொனால்ட் ஜூனியர், இவான்கா, எரிக் ஆகியோர் இவானாவின் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் விளங்கினர்’ எனவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்