தனியார் பஸ்களுக்கு இன்று முதல் அட்டன் டிப்போவிலிருந்து டீசல்

0
397

இன்று முதல் அட்டன் தனியார் பஸ்களுக்கு டீசல் வழங்குவது  தொடர்பில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக, ஹட்டன் இ.போ.ச பஸ் டிப்போ மூலம் தனியார் பஸ்களுக்கு டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஹட்டன் டிப்போ முகாமையாளர் டபிள்யு.ஜி.கே. கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் தினமும் 20 – 30 பஸ்களுக்கு டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இவற்றில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பஸ்கள் தொடர்பான சுற்றுநிருபம், ஹட்டன் – தனியார் பஸ் சேவை அலுவலகத்திடமிருந்து கோரப்பட்டுள்ளது என்றார்.

ஹட்டனிலிருந்து குறுகிய தூர சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு,  வாரத்துக்கு 100 – 150 லீற்றர் டீசலை வழங்கவும் தூர இடங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு தினமும் 100 லீற்றர் டீசலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here