விளக்கமறியலில் வைக்கப்பட்டடிருந்த போது கைத்தொலைபேசி பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே தனிஸ் அலிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை விதிகளுக்கு முரணாக கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிறைச்சாலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

இதன்படி, சந்தேக நபருக்கு 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி முன்னிலையில் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பின்னர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.