தன்னைத்தானே மணம் முடிக்கும் பெண் கோவாவுக்கு ஹனிமூன்

0
303

Sologamy என்றால் தன்னைத் தானே மணம் முடித்துக் கொள்வது. இந்த புதுவித திருமணத்தை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது ஷமா பிந்து என்ற பெண் மேற்கொண்டுள்ளார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஷமா பிந்துவுக்கு வயது 24.
திருமணம் முடிந்த கையோடு இரண்டு வாரம் ஹனிமூன் ட்ரிப்பாக கோவா செல்லப்போவதாகவும் பிந்து தெரிவித்துள்ளார்.

இவருக்கு திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லையாம். வேறு ஒரு நபருடன் திருமணம் செய்து வாழ விரும்பாத இவருக்கு மணப் பெண்ணாக இருக்க வேண்டும் என ஆசை உள்ளது.

எனவே இவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து அதற்கு திகதியும் குறித்துள்ளார். இவரது திருமணம் ஜூன் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு திருமண வாழ்வில் விருப்பம் இல்லை.

இருந்தாலும் மணப்பெண் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது. எனவே, என்னை நானே திருமணம் செய்ய முடிவு செய்து விட்டேன். இது குறித்து ஒன்லைனில் தேடிப் பார்த்தேன். இது போன்று யாரும் இந்தியாவில் திருமணம் செய்து கொள்ளவில்லை.
எனவே, நாட்டிலேயே சுய காதலுக்கு நான் தான் எடுத்துக் காட்டாக இருப்பேன் என நினைக்கிறேன்.

சுய திருமணம் என்பது தன்னை தானே நிபந்தனை இன்றி விரும்பவதாகும். விரும்பும் நபரை தான் ஒருவர் மனம் முடிப்பார்கள். என்னை நான் விரும்புகிறேன். எனவே என்னை நானே திருமணம் செய்து கொள்கிறேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here