தபால் கட்டணங்கள் எதிர்வரும் 15ம் திகதி முதல்  திருத்தம் செய்யப்பட உள்ளது. இதன்படி 15 ரூபாவாக உள்ள சாதாரண கடிதத்திற்கான தபால் கட்டணம் 50 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதிவு செய்யப்பட்ட தபால் கட்டணம் 45 ரூபாவில் இருந்து 110 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் 250 கிராம் எடையுள்ள பொருட்களுக்கான சரக்கு கட்டணம் 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேலும் பல தபால் கட்டணங்களின் விலை குறைக்கப்படும் எனவும், இந்த கட்டணங்கள் இன்று அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.