தபால் திணைக்களத்தின் அறிவிப்பு

0
350

நாடுகள் பலவற்றுக்கு தபால் மூலம் பொருட்களை அனுப்புவதற்காக அவற்றை பெற்றுப்பேற்கும் நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கைக்கான விமான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டும் இடைநிறுத்தப்பட்டும் உள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்கா, நெதர்லாந்து, இஸ்ரேல் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கான விமான அஞ்சல் மற்றும் பொருட்களை ஏற்றுக்கொள்வது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here