தப்பியோட முயன்றவர்கள் கடற்படையினரால் கைது

0
138

இலங்கையிலிருந்து நேற்று (28) இரவு கடல் வழியாக வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 44 பேர் திருகோணமலை, மட்டக்களப்பு, வலைத்தோட்டம் கடற்கரை பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் நான்காவது விரைவுத் தாக்குதல் படைக்கு சொந்தமான விரைவுத் தாக்குதல் கப்பல்கள் நேற்றிரவு (28) திருகோணமலை கடற்பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தன.

இவ்விசேட நடவடிக்கையின் போது, இலங்கையிலிருந்து கடல் வழியாக வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் ஆட்கடத்தலுடன் தொடர்பட்ட 5 பேர் உள்ளிட்ட 18 வயதுக்கு மேற்பட்ட 25 ஆண்கள், 02 பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 02 பேர் உள்ளிட்ட 29 பேர், பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பலுக்கு நிலத்திலிருந்து நபர்களை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் குச்சவெளியைச் சேர்ந்த 02 பேர் மற்றும் டிங்கி படகு ஒன்றும் கைது செய்யப்பட்டுள்ளது.

நேற்றிரவு கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் வலகம்பா நிறுவனம் குச்சவெளி கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு தேடுதல் நடவடிக்கையின் கடற்படையினர் இக்கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here