ஒரு மாதகால பாராளுமன்ற உறுப்பினராகவும் இரு வார கால அமைச்சராகவும் செயற்பட்டு பதவி விலகிய பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேரா தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ள நிலையில், அவரது வெற்றிடத்திற்காக மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ நுழைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பசில் ராஜபக்ஷவின் இராஜினாமாவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தம்மிக்க பெரேரா விலகுவாரா இல்லையா என்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.