பிரபல தொழிலதிபர் தம்மிக்க அரசியலுக்கு வந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரது கொழும்பு இல்லத்தின் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீP லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா கடந்த இரு நாட்களுக்கு முன்பு றியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, தனது தேசியப் பட்டியல் எம்.பி பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு நியமிக்கப்பட்டு அரசியலுக்கு வந்ததை எதிர்த்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.