தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு மற்றும் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு ஆகிய 2 புதிய அமைச்சுகளை உருவாக்கி விஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சுகளுக்கான விடயதானங்கள் மற்றும் பொறுப்புகள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி,  ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டு, கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்த சில விடயங்கள் நீக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றையதினம் (6/9) பசில் ராஜபக்‌ஷ ஶ்ரீ.ல.பொ.பெ. தேசியப் பட்டியல் எம்.பி பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து குறித்த பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும், தொழிலதிபர் தம்மிக பெரேரா அப்பதவிக்கு நியமிக்கப்பட்டு, அவருக்கு குறித்த அமைச்சு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.