தரிசு நிலங்களை விவசாயத்துக்கு வழங்கக்கோரி ஸ்டொக்ஹோம் மக்கள் போராட்டம்!

0
370

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட சாமிமலை ஸ்டொக்ஹோம் தோட்டத்தில் தரிசு நிலங்களை மக்களுக்கு கையளிக்க வேண்டுமெனவும் தனியாருக்கு கையளிக்க கூடாதெனவும் கோரி குறித்த தோட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த தோட்டத்தில் 8 ஹெட்டேயர் தரிசு நிலம் காணப்படுவதாகவும் தற்போதைய சூழ்நிலையில் விவசாயம் மேற்கொள்வதற்கு குறித்த தரிசு நிலங்களை தோட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்க குறித்த தோட்ட மக்களால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தோட்ட நிர்வாகம் தரிசு தில பகுதியை தனியாருக்கு விற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஸ்டொக்ஹோம் தோட்ட மக்கள் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் குறித்த தோட்ட மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் குழந்தைவேலு சுரேஸ்குமார் தெரிவிக்கையில்,

ஹொரண பிளான்டேஷேனுக்கு உட்பட்ட ஸ்டொக்ஹோம் தோட்டத்தில் 8 ஹெட்டேயர் தரிசு நிலம் காணப்படுகின்றது. இத்தரிசு நிலத்தை தோட்ட மக்கள் விவசாயத்துக்காக பயன்படுத்த கோரிய நிலையில் அதை தனியாருக்கு விற்க ஏற்பாடு செய்துள்ளனர்.இதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இது தொடர்பாக தோட்ட நிர்வாகத்திடம் பல முறை கேட்டும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை ஆனால் இந்நிலத்தை தனியாருக்கு விற்க ஏற்பாடு செய்துள்ளனர்.
அரசாங்கம் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டில் பொருளாதர நெருக்கடியை சந்தித்திருக்கும் வேளையில் மக்கள் விவசாயத்தை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் தரிசு நிலங்களை மக்களுக்கு கையளிக்க வர்த்தமானியை அறிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

ஸ்டொக்ஹோம் தோட்ட நிர்வாகம் தொடர்ந்தும் இத்தரிசு நிலத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்காமல் தனியாருக்கு விற்க முற்பட்டால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படுமெனவும் குழந்தைவேலு சுரேஸ்குமார் தெரிவித்தார்.

எஸ். சதீஸ்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here