தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேகத்திலிருந்து உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலமொன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் யார் என அடையாளம் காணப்படாத நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விசாரணைகளின் பின் சடலம் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்